பிந்திய செய்திகள்

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா வெளியிட்ட செய்தி

இலங்கையில் “எல்லா வேறுபாடுகளையும் கருத்தில் கொள்ளாமல் ஒரே தேசமாக அனைத்து இனத்தினரும் ஒன்றிணைந்து எமது சுதந்திரத்திற்காக போராடினோம்” என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா விடுத்துள்ள விசேட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பிரித்தானிய ஆட்சியில் இருந்து எமது தாய்நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் கொண்டாடும் 74 வது ஆண்டு நிறைவு தின நாளில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் என்ற முறையில் நான் இந்த செய்தியை வெளியிடுவதை ஒரு பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.

1505 ஆம் ஆண்டிலிருந்து 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி வரை சுதந்திரம் பெறுவதற்காக நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக போர்த்துக்கேயர், டச்சு மற்றும் ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்து நமது முன்னோர்கள் சுதந்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கு காலங்காலமாக செய்த போராட்டத்தையும் தியாகத்தையும் தேசபக்தியுடன் நினைவு கூற விரும்புகிறேன்.

அதேவேளை, 2009 மே மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற மனிதாபிமானமான நடவடிக்கையின் போது தாய்நாட்டை விடுவிப்பதில் தமது பொன்னான உயிரை தியாகம் செய்த வீரர்களை பக்தியுடன் நினைவு கூர்ந்து அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன். மேலும், தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக போரிட்டு அங்கவீனமுற்ற மாவீரர்களை நான் மரியாதையுடன் நினைவுகூருகின்றேன். ஆங்கிலேயர்களின் சாம்ராஜ்யத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவது எளிதான காரியமாக அமையவில்லை அது அனைத்து தேசத்தினரும் ஒன்றாக இருந்து தொடர்ந்த தேசியப் போராட்டங்கள் மத, அரசியல் மற்றும் சமூக தாக்கங்களின் மீறி பெற்ற வெற்றியாகும். அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் இருந்த நவீன ஆயுதங்கள், போர் அறிவுக்கு அப்பாற்பட்ட போர் அறிவும், சாதுர்யமும், போர்த்திறனும் இலங்கைத் தேசிய வீராங்கனைகளிடம் இருந்தமை இன்றும் உதாரணமாக கொள்ளளாம் என்பதை நினைவூட்டுவதில் பெருமை கொள்கிறேன். பல தியாகங்கள் மற்றும் தியாகங்கள் மூலம் நாம் பெற்ற சுதந்திரம் தொடர்வதற்கு வீரமிக்க போர்வீரர்களாகிய உங்களது தொடர்ச்சியான அர்ப்பணிப்பு அவசியமானது என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

தேசிய பாதுகாப்பு, இறையான்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் முதன்மைப் பொறுப்பை இலங்கை நிறைவேற்றிவருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இலங்கையர்களை ஆட்டிப்படைத்துள்ள கொவிட்-19 தொற்றை முறியடிக்கும் தேசியப் பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றி மற்றும் தற்பொழுது நடைபெற்றுவரும் தடுப்பூசி திட்டங்களுக்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி இலங்கையை பாதுகாத்த உங்கள் பங்களிப்பை இந்த சிறப்பு நாளில் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு இடையூறாக உள்ள சட்டவிரோத குழுக்களின் செயற்பாடுகள், போதைப்பொருள் பாவனை மற்றும் ஏனைய சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இராணுவத்தினரின் பங்களிப்பையும் நான் பாராட்டுவதோடு தேசிய பாதுகாப்பு, இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான உங்களது அர்பணிப்புகளையும் பாராட்டுகிறேன். அதேபோல், இலங்கை இராணுவம் தனது அயராத அர்ப்பணிப்பு சேவை மூலம் தொடர்ந்தும் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் அதேவேளை பாராட்டத்தக்க சமூக நலன் சார்ந்த வேளத்திட்டங்களிலும் அர்ப்பணித்து வருகிறது. மேலும், கடந்த வருடங்களில் 3861 தகுதி வாய்ந்த அதிகாரிகள் மற்றும் 78707 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமையினை நான் இங்கு மகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறேன். அதற்கு மேல், 74 வது சுதந்திர தினத்தை ஒட்டி, மேலும் 480 அதிகாரிகள் மற்றும் 8034 சிப்பாய்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன பெற்றுள்ளனர் என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

தாய்நாட்டின் பெருமை , ஒற்றுமை மற்றும் பலம் ஆகியவற்வை வெளிப்படுத்தும் முகமாக ஒவ்வொரு வருடமும் தேசிய சுதந்திர தினம் பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. 74 வது தேசிய சுதந்திர தின நிகழ்வானது அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுதந்திர சதுக்கத்தில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கொண்டாடப்படவருக்கும் அதேவேளை இந்த நிகழ்வான நல்லிணக்கத்தின் சமாதானம், நிலைத்தன்மை, மற்றும் உணர்வுகளை பிரதிபளிப்பாதாக அமையும்.

கடமையாற்றும் இடத்தில் இருந்து இன்று அனைவரும் இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் இணைந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். மேலும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக தங்களை தியாகம் செய்த இராணுவத்தின் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சவில் பணியாளர்களின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts