பிந்திய செய்திகள்

தொலைபேசியால் பல்கலைக்கழக மாணவிகள்இடையே ஏற்பட்ட மோதல்!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வாடகை அறையில் தங்கியிருந்த மருத்துவபீட, கலைப்பீட மாணவிகளிற்கிடையிலேயே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது.

வாடகை அறையில் தங்கியிருந்த கலைப்பீட மாணவி அடிக்கடி தொலைபேசியில் உரையாடுபவர் என்றும், இதனால் தனது கல்விக்கு இடையூறு ஏற்படுவதாக மருத்துவபீட மாணவி தொடர்ந்து சுட்டிக்காட்டிதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவும் கலைப்பீட மாணவி நீண்டநேரம் தொலைபேசியில் உரையாட, சிலமுறை சுட்டிக்காட்டிய மருத்துவபீட மாணவி, ஆத்திர மிகுதியில் தனது கையடக்க தொலைபேசியினால் கலைப்பீட மாணவியை நோக்கி எறிந்துள்ளார்.

இதனையடுத்து விவகாரம் சமரசம் செய்யப்பட்டதுடன், ஒரு மாணவிக்கு அவரது நண்பர் மாற்று தங்குமிடம் ஏற்பாடு செய்ததாகவும் கூறப்பட்டுகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts