பிந்திய செய்திகள்

வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்

அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் உட்பட சுகாதாரத்துறைசார்ந்த தொழிற்சங்கங்களால் நாடுதழுவிய ரீதியில் பதவி உயர்வு, இடர்கால கொடுப்பனவு, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரையில் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த போராட்டம் வவுனியாவிலும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வைத்தியசாலைக்கு மருத்துவ சேவைபெறுவதற்காக சென்ற நோயாளர்கள், கர்ப்பிணித் தாய்மார் ஆகியோர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு வவுனியா வைத்தியசாலைகளிலும் ஆதரவு வழங்கப்பட்டதுடன். அவசர மற்றும் உயிர் காக்கும் வைத்திய சேவைகள் மாத்திரம் வழமைபோன்று செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts