பிந்திய செய்திகள்

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

இன்று(07)வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.மற்றொருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டின் பின்புறம் கட்டுமானப் பணிக்காக குழி தோண்டிக் கொண்டிருந்தவர்கள் மீதே மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் குழியில் இருந்த ஐந்து ஊழியர்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,மேலும் மற்றொருவர் காயங்கள் இன்றி தப்பித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts