பிந்திய செய்திகள்

பொலிசாரிடம் மாட்டிய 60 கிலோ மாட்டிறைச்சி…!

நேற்று பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ரங்கல நகரப் பகுதியில் கெப் ரக வாகனத்தில் எருமைமாட்டு இறைச்சியை கொண்டு சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 60 கிலோ 500 கிராம் எடையுடைய எருமை இறைச்சி மீட்கப்பட்டுள்ளது.மேலும் அவர்கள் வசம் வைத்திருந்த உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டும், 12 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

தெஹிவளை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 65 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts