பிந்திய செய்திகள்

அதிகரிக்குமா மின் கட்டணம்-வெளி வந்த தகவல்

இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இனி வரும் காலங்களில் மாதாந்த மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தனியார் துறையிடம் இருந்து 300 மெகாவோட் மின்சாரத்தை மூன்று ஆண்டுகளுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் முயல்வதாகவும் ரஞ்சன் ஜயலால் சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் தனியாரிடம் நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு 95 பில்லியன் ரூபாய் செலவாகும் எனவும் அரசாங்கம் பிரச்சினையை தீவிரப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

ஏப்ரலில் எதிர்பார்க்கப்படும் மழையின் மூலம் நீர்த்தேக்கங்களை நிரப்ப முடியும் என்று அரசாங்கம் கூறியதாக தெரிவித்தார்.

மேலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருட்களின் விலைகளை விரைவில் கட்டாயம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஐஓசி நிறுவனம், நேற்று முன்தினம் நள்ளிரவுமுதல் பெற்றோலின் விலையை 7 ரூபாயாலும் டீசலில் விலையை 3 ரூபாயாலும் அதிகரித்திருந்தது.என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர்மேலும் தெரிவித்தார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts