பிந்திய செய்திகள்

அதிவேக வீதியில் அடுத்தடுத்து மோதிய3 வாகனங்கள்…

நேற்று (07) இரவு 7 மணியளவில் கொட்டாவ அதிவேக வீதியின் நுழைவாயில் இருந்து காலி நோக்கிய இரண்டாவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து சம்பவம்

இயந்திர கோளாறு காரணமாக கொள்கலன் லொறி ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை முந்திச் செல்ல பேருந்தொன்று முற்பட்ட போது அதற்கு பின்னால் வந்த கார் ஒன்று பேருந்தின் மீது மோதியுள்ளது.

விபத்தில் காரில் இருந்த இருவர் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிவேக வீதி சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் கொள்கலன் லொறி , பேருந்து மற்றும் கார் சேதமடைந்துள்ளன.இந்த விபத்து காரணமாக சுமார் 5 கிலோமீற்றர் தூரம் வரை வாகன நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts