பிந்திய செய்திகள்

தமிழர் கடற்பரப்பில் கரை ஒதுங்கும் வெளிநாட்டுக் கழிவுகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் தேத்தாதீவு, களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில்
காலணிகள் வெற்றுப் போத்தல்கள், குளிர்பான போத்தல்கள், மூங்கில்கள், உள்ளிட்ட பல பொருட்கள் கடலலையில் அள்ளுண்டு கரையொதுங்குவதாகவும், இதனால் சூழலுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும், கடற்கரையை இரசிக்க வருபர்களுக்கும் இக்கழிவுகள் பெரும் தடையாகக் காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கரையொதுங்கும் சில வெற்றுப்போத்தர்களில் மியன்மார், என ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ளதையும், அவதானிக்க முடிகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts