பிந்திய செய்திகள்

இலங்கை அழகியிடம் இருந்து பறிக்கப்பட்ட சர்வதேச அழகி பட்டம்

திருமதி அழகி பட்டம் வென்ற புக்ஷ்பிகா டி சில்வாவின் திருமதி இலங்கை அழகி பட்டம் உடன் அமுலாகும் வகையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டு திருமதி இலங்கை அழகியாக தேர்வு செய்யப்பட்ட புஷ்பிகா டி சில்வாவின் பட்டத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய திருமதி இலங்கை அழகி ஏற்பாட்டு குழு பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

சந்திமால் ஜயசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளார் .திருமதி உலக அழகி போட்டிக்காக, இலங்கை திருமதி அழகியை தெரிவுசெய்வதற்காக தமது அமைப்பு கொண்டுள்ள சட்டரீதியான அதிகாரத்துக்கமைய, இன்று முதல் புஷ்பிகா டி சில்வாவின் திருமதி இலங்கை அழகி பட்டத்தை, உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் எந்தவிதத்திலும் பயன்படுத்த தடை விதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts