பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கம் பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை தேடித்த தந்து நாட்டுக்கும் தான் பிறந்த எம்மண்ணுக்கும் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி பெருயை சேர்த்துள்ளார்.
இவரை எதிர்கட்சித்தலைவர் சஜித்பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாச ஆகியோர் சந்தித்துள்ளனர்.
தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் வாழ்ந்து வரும் இந்துகாதேவி, குத்துச்சண்டையில் உலகளவில் சாதனை படைத்துள்ளார்.
அதேவேளை தங்கம் வென்று நாடு திரும்பியபோது இந்துகாதேவிக்கு , உரிய மரியாதை வழங்கப்படவில்லை என பரவலாக விசனம் வெளியிடப்பட்டிருந்து. அதோடு இந்துகாதேவி ஒரு தமிழ் மகள் என்பதனால் புறக்கணிக்கப்பட்டிருந்ததாக பலரும் கவலைகளை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது அவரை எதிர்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாச ஆகியோர் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















































