பிந்திய செய்திகள்

இராணுவத்தினரினால் போடப்பட்ட வீதித்தடை-மோதிய உந்துருளி

08.02.2022 இன்று இரவு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வீதியில் மானுருவி என்ற பகுதியில் இராணுவத்தினரால் போடப்பட்ட வீதித்தடையில் மோதி ஒருவர் காயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீதிகளில் 5 கிலோமீற்றருக்கு ஒரு வீதித்தடையினை படையினர் ஏற்படுத்தியுள்ளார்கள் அதிகளவான வீதிதித்தடைகள் காணப்படும் மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.

இன்று இரவு ஒட்டுசுட்டான் வீதியில் உந்துருளியில் பயணித்த நபர் ஒருவர் மானுருவி பகுதியில் உள்ள இராணுவத்தினரின் வீதித்தடையில் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts