பிந்திய செய்திகள்

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த ‘பார்சல்’-உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

நேற்று (08) சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்
19 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருள்அனுப்பப்பட்டநிலையில் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர், சுங்க பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

குறித்த பார்சலானது அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு கொழும்பு பிரதேசத்தில் உள்ள 5 அஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் 05 சந்தேகத்திற்கிடமான பார்சல் கடிதங்களை திறந்து சோதனையிட்ட போது போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கிலோ கஞ்சா மற்றும் 50 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் குறித்த போதைப்பொருள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts