பிந்திய செய்திகள்

யாழில் பூசகர் ஒருவரை கடத்திய கொள்ளையர்கள்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பளை பகுதியில், யாழில் பூசகர் ஒருவரை கடத்திச் சென்று அவரிடம் இருந்த நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீதியோரமாக நின்றிருந்த பூசகரை கடத்திச் சென்று அவரிடம் இருந்த ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் என்பன கொள்ளையிடப்பட்டதாக, பருத்தித்துறை பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், நேற்று (07.02.2022 ) சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர்.

மேலும், சிலர் தலைமறைவாகி உள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts