பிந்திய செய்திகள்

மட்டக்களப்பில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட தந்தை மற்றும் மகள்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில் நேற்று (08) மாலை17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், சிறுமியின் தந்தையார் இன்று (09) காலையில் வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

களுவங்கேணி முதலாம் பிரிவு அக்கரைவீதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷ்ணகுமார் கிறிஷ்கா, அவருடைய தந்தையான 53 வயதுடைய முத்து கிருஷ்ணகுமார் என்பவர்களே இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருவதாகவும் இளைஞன் ஒருவரை அவர் காதலித்துவரும் நிலையில் சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சம்பவ தினமான நேற்று மாலை வீட்டில் நஞ்சு அருந்தி சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து சிறுமி தற்கொலைக்கு காரணம் சிறுமியின் தந்தையார் என அந்தபகுதி அயலவர்கள் பேசத்தொடங்கியதையடுத்து சிறுமியின் தந்தையார் இன்று காலையில் வீட்டின் அறையின் உள்ள கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த இரு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts