பிந்திய செய்திகள்

திருகோணமலை மாவட்டத்திற்கு முதல் முதலாக பெண் தவிசாளர் நிஜமனம்

திருகோணமலை மாவட்டத்தில் தவிசாளராகக் கடமையாற்றிய மகாத் குசன் களாஸ், தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தவிசாளராக கிண்ணியா, ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியையாகக் கடமையாற்றும் எழிலரசி நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு மூலம் அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காணி பிணக்குத் தொடர்பாக, இல-759, ஈச்சந்தீவு-03 ,கிண்ணியா என்ற முகவரிக்கு தங்களது பிணக்குகளை தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு, புதிய தவிசாளர் பொதுமக்களைக் கோரியுள்ளார்.

அதேவேளை திருகோணமலை மாவட்டத்தின் முதல் பெண் தவிசாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts