பிந்திய செய்திகள்

பதவி விலகினார் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க…

ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க பதவி விலகியுள்ளார்.

இவர் தனது பதவி விலகல் கடிதத்தை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கையளித்துள்ளார். முன்னதாக, தென்னை, கித்துல், பனை செய்கைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தமது பதவியில் இருந்து விலகியிருந்தார்.

மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

மருத்துவ பீட மாணவர்களை தாக்கிய சந்தேகநபர்கள், தென்னை, கித்துல், பனை செய்கைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் பிரவேசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts