பிந்திய செய்திகள்

இலங்கைக்கு வெள்ளி பதக்கத்தை வென்ற இளம் வீராங்கனை உயிரிழப்பு

இலங்கையின் முன்னாள் பட்மிண்டன் வீராங்கனை ஓஷடி குருப்பு
கொழும்பு விசாகா கல்லூரியின் பழைய மாணவியான ஓஷதி, சிறுவயதிலிருந்தே பூப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கியதுடன், 2015 ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் போட்டியிடவும் முடிந்தது. அவர் 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை பூப்பந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் பெண்கள் அணி நிகழ்வில் இலங்கைக்கான வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அதுமட்டுமின்றி, 2016 ஆசிய பூப்பந்து சம்பியன்ஷிப் மற்றும் 2017 ஆம் ஆண்டு சம்மர் யுனிவர்சியேட் ஆகியவற்றிலும் ஓஷதி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.இவர் தனது 27வது வயதில் உயிரிழந்துள்ளார்.

ஓஷதிக்கு 2020 ஆம் ஆண்டு இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு இரண்டு வருடங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (08)உயிரிழந்துள்ளார்.இவருக்கு பலர் அனுதாபங்களை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts