பிந்திய செய்திகள்

உயர்தர பரீட்சை மாணவர்கள் இருவர் -பரீட்சை மண்டபத்திற்கு பொறுப்பான ஆசிரியர் செய்த செயல்

கம்பகா, தக்ஷிலா கல்லூரியில் உள்ள பரீட்சை மண்டபம் ஒன்றில்
க.பொ.த (உயர்தர) பரீட்சைக்கு இன்று தோற்றிய இரண்டு மாணவர்கள் கலைப் பாடத்தின் இரண்டாம் பகுதிக்கான வினாத்தாள் வழங்கப்படவில்லை என கம்பகா வலயக் கல்வி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பரீட்சை மண்டபத்திற்கு பொறுப்பான ஆசிரியர் ஒருவரிடம் பாடத்தில் முதல் வினாத்தாளின் விடையை முடித்துவிட்டு இரண்டாவது வினாத்தாள் குறித்து கேட்டபோது, ​​இரண்டாவது வினாத்தாள் வரவில்லை என கூறியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

பரீட்சை முடிந்ததும் நடந்த சம்பவத்தை பரீட்சைக்கு தோற்றிய ஏனைய மாணவர்களிடம் கூறும்போது அவர்கள் தமக்கு இரண்டாவது வினாத்தாள் கிடைத்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து குறித்த மாணவர்கள் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இது தொடர்பில் கம்பகா வலயக் கல்விப் பணிப்பாளர் அனுர பெம்லால் தெரிவிக்கையில், இது குறித்து பரீட்சைகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து, கிடைத்த அறிவுறுத்தலின் பேரில், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியரை பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.மற்றும் இது தொடர்பில் தேவையான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என கம்பகா வலயக் கல்விப் பணிப்பாளர் அனுர பெம்லால் தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts