பிந்திய செய்திகள்

நிறுத்த பட்ட படகுகள் ஏல விற்பனை

இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை செய்யப்பட்டு வந்தது
இந்த நிலையில் ஏல விற்பனை யில் கலந்து கொண்டு படகுகளை கொள்வனவு செய்ய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் தலைமன்னார் பியர் இறங்கு துறை பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

எனினும் இன்று அறிவிக்கப்பட்டது போன்று ஏல விற்பனை இடம் பெறவில்லை என வருகை தந்த கொள்வனவாளர்கள் தெரிவித்தனர்.

இன்று (10) வியாழக்கிழமை காலை முதல் மதியம் வரை ஏல விற்பனைக்காக காத்திருந்த போதும் இறுதி நேரத்திலேயே குறித்த ஏல விற்பனை இடம் பெறாது என ஏற்பாட்டாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தூர இடங்களில் இருந்து வருகை தந்த கொள்வனவாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts