பிந்திய செய்திகள்

மனித பாவனைக்கு உதவாத 40,000 கிலோகிராம் நிறையுடைய உருளை கிழங்குகள் மீட்பு!

தம்புள்ளை நகர முதல்வருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள இரண்டு களஞ்சியசாலைகளை சோதனைக்கு உட்படுத்திய போது 40,000 கிலோகிராம் நிறையுடைய குறித்த கிழங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து வர்த்தகர் ஒருவரால் இறக்குமதி செய்யப்பட்ட, மனித பாவனைக்கு உதவாத உருளை கிழங்குகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இறக்குமதி செய்யப்பட்ட குறித்த உருளை கிழங்குகளை சுத்தம் செய்து, அவற்றை பழுதடையாத உருளை கிழங்குகளுடன் கலந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மேற்படி இரு களஞ்சியசாலைகளையும் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.

Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts