பிந்திய செய்திகள்

வீட்டு காணிக்குள் நுழைந்த அரச பேரூந்து…

இன்று (11) மதியம் வவுனியா கனகராயன்குளம் பகுதியில்
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் கனகராயன்குளம் பகுதியில் வீதியில் மறுபக்கம் மாறமுற்பட்டுள்ளது.

இதன் போது அதே பாதையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதுடன் பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பாதையினை விட்டு கீழிறங்கி அருகேயிருந்த ஓர் காணியினுள் புகுந்தது.

இவ் விபத்தில் ஐவர் காயமடைந்ததுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts