பிந்திய செய்திகள்

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு-2வர் உயிரிழப்பு

நேற்றிரவு பெல்மடுல்ல – படலந்த பிரதேசத்தில் வயல்வெளி ஒன்றில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பெல்மடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருவர் மின்சாரம் தாக்கி வயல்வெளியில் விழுந்துள்ளதாக பெல்மடுல்ல காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காயமடைந்த இருவரையும் மீட்டு கஹவத்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பெல்மடுல்ல, படலந்த பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts