பிந்திய செய்திகள்

ஜனாதிபதிக்கு முன் தமிழில் உரை ..

நேற்று வெள்ளிக்கிழமை (11-02-2022) வவுனியா பல்கலைக் கழகத்தில் வடமாகாணத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான வவுனியா பல்கலையின் அங்குராப்பண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னால் வர்வேற்புரையை வவுனியா பல்கலையின் துணைவேந்தர் கலாந்தி த.மங்களேஸ்வரன் தமிழில் நிகழ்த்தியுள்ளார்.மேலும் இது குறித்து முகநூலில் Babugi Muthulingam என்பவர் வெளியிட்ட கருத்து,

ஜனாதிபதிக்கு முன்னால் தமிழில் உரை நிகழ்த்திய துணைவேந்தர்! - ஜே.வி.பி நியூஸ்

விமர்சனங்கள் கருத்துகளுக்கு அப்பால் நான் உளமார மகிழ்ந்த விடயம் ஒன்று இடம்பெற்றது. வவுனியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் ஐயாவின் உரை. அது வரவேற்புரை. தமிழில் நிகழ்ந்த ஒரே ஒரு உரை.

நான் கூட இவர் என்ன மொழியில் உரையாற்றுவார் என யோசித்துக் கொண்டிருந்தேன். ஜனாதிபதிக்கு புரியும் வகையில் ஆங்கிலமாக இருக்குமோ என யோசித்திருந்தேன். இல்லை. மனிதர் தமிழில் தொடங்கிய உரை தமிழிலேயே முடிவடைந்தது. தமிழ் உரை தொடங்கியவுடன் பலர் கைதட்டல்களை வழங்கியிருந்தனர்.என தெரிவித்தார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts