மீண்டும் வெடிக்க தொடங்கும் எரிவாயு அடுப்பு

நேற்றைய தினம்(சனிக்கிழமை) யாழின். குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பானது அணைக்கப்பட்டிருந்த நிலையிலும் வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தின்போது அருகாமையில் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்