தரநிலை பரிசோதிக்கும் அதிகாரி ஒருவர் நாடு முழுவதும் இரசாயனங்களைப் பயன்படுத்தி, வாழைக்காய்களை 2 மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுதெரிவித்துள்ளார்.
இது பொது மக்களின் உயிரைப் பறிக்கும் செய்கைகளில் ஒன்று எனவும், நாட்டின் பல இடங்களில் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புறக்கோட்டை மெனிங் சந்தையில் வாழைக்காய்கள் 2 மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பச்சை நிறத்தில் காணப்படும் வாழைக்காய்களுக்கு மிகவும் ஆபத்தான இரசாயனத்தை தெளித்து அதனை தொங்க விடுவதாகவும், இரண்டு மணித்தியாலங்களில் வாழைக்காய் வாழைப்பழமாக மாறிவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.