பிந்திய செய்திகள்

கிராமங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டூழியம்!

நேற்றைய தினம் சனிக்கிழமை (12-02-2022) இரவு திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வானாறு, ஆயிலியடி கிராமங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் பல சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் போது சுமார் 3 – 5 யானைகள் ஊருக்குள் புகுந்து பேக்கரி உற்பத்திப் பொருட்களான பாண், பனீஸ் முதலான உண்டதோடு அதன் உபகரணங்களை வெளியில் எடுத்து வீசியுள்ளது.

இதனால் பேக்கரி உரிமையாளர்கள் தாம் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.

இதனையடுத்து சுமார் நூறு தென்னை மரங்கள் உள்ள தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் சுமார் 15க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட வேளாண்மைச் செய்கை காணிக்குள் புகுந்து சுமார் இரண்டு ஏக்கருக்கும் மேற்பட்ட நெல்லை அழித்துள்ளதாக விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடை ஒன்றுக்குள் வைக்கப்பட்டுள்ள வாழைக்குலைகளை சாப்பிட்டுள்ளதோடு, சிறு சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கடைக்காரர் கூறினார்.

இரவில் தூங்க முடியாது பயமாக உள்ளதாகவும், யானைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts