பிந்திய செய்திகள்

இலங்கையில் மீட்கப்பட்ட அரிய வகை கழுகு!!

புத்தளம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வீடொன்றில் சோதனை செய்த போது புத்தளம் – பாலாவி பகுதியில் சட்டவிரோதமான முறையில் வளர்த்து வந்த அரிய வகை வெள்ளை நிற கழுகு மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து வெள்ளை வயிற்றுக் கடல் கழுகு இனத்தைச் சேர்ந்த அரிய வகை வெள்ளை நிற கழுகு கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் ஒருவர் கைது

இந்த அரிய வகைக் வெள்ளை நிற கழுகு விற்பனை செய்வதற்காக சந்தேகநபர் வீட்டில் வைத்து வளர்த்து வந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் புத்தளம் காவல்துறையினரும் புத்தளம் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts