பிந்திய செய்திகள்

வத்துகாமம் – எல்கடுவ வீதியில் பள்ளத்தில் விழுந்து பாரிய விபத்து

நேற்று சனிக்கிழமை (12-02-2022) இரவு வத்துகாமம் – எல்கடுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்தில் 32 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளனர்.

வத்துகாமம் – எல்கடுவ வீதியில் பயணித்த டிப்பர் ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதனால், டிப்பரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சாரதி காயமடைந்துள்ள நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வத்துகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts