Home இலங்கை தொடர்சியாக பெய்து வரும் மழை -600 ஏக்கர் வரையான நிலக்கடலை செய்கை பாதிப்பு

தொடர்சியாக பெய்து வரும் மழை -600 ஏக்கர் வரையான நிலக்கடலை செய்கை பாதிப்பு

0
தொடர்சியாக பெய்து வரும் மழை -600 ஏக்கர் வரையான நிலக்கடலை செய்கை பாதிப்பு

முல்லைத்தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தில் 600 ஏக்கர் வரையான நிலக்கடலை செய்கை முற்றாக அழிவடைந்துள்ளன.

தற்போது நிலவும் சீரற்ற காலைநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து ருகின்றது. நிலக்கடலைசெய்கை,மிளகாய்செய்கை,பூசணிசெய்கை,வெங்காய செய்கை, போன்ற விளைபயிர்கள் மழைவெள்ளத்தினால் அழிவடைந்துள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிகளவான விவசாயிகள் நிலக்கடலை செய்கையினை மேற்கொண்டுள்ள நிலையில் மழைவெள்ளத்தினால் அவை அழிவடைந்துள்ளதாக விவாசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடன்பெற்று அடைவுவைத்து நிலக்கடலை செய்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.

நிலக்கடலைக்கு நல்ல விலை காணப்படுகின்றது ஒரு அந்தர் 22ஆயிராம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் நெல்லில் அழிவினை சந்தித்த விவசாயிகள் மேட்டுநில பயிராக நிலக்கடலையினை மேற்கொண்டநிலையில் இயற்கை அனர்த்தத்தினால் அழிவினை சந்தித்துள்ளார்கள்.இந்த அழிவிற்கு அரசாங்கம் இழப்பீடு தரவேண்டும் என கோரிக்வை விடுத்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here