பிந்திய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 28 வயதுடைய பெண் நடன கலைஞர்

நேற்று முன்தினம் மஹரகம புகையிரத நிலைய வீதியிலுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் , 28 வயதான நடனக் கலைஞரான இவந்திகா குமாரி ஹேரத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவந்திகா குமாரி ஹேரத் குருநாகல் ஹிரிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர். ஹிரியால அஓகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் திறமையான நடனக் கலைஞராக சிறந்து விளங்கிய அவர், நிட்டம்புவவில் உள்ள ஓமயா நடனக் குழுவில் சில காலம் உறுப்பினராக இருந்தார் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

இவந்திகா குமாரி ஹேரத் , கடந்த 2016 இல் திருமணம் செய்து விவாகரத்து ஆன பின்னர் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்த அவர், வர்த்தகர் ஒருவருடன் காதல் வசப்பட்ட நிலையில், வர்த்தகர் ஏற்பாடு செய்த மகரகம வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இவந்திகா குமாரி தூக்கில் தொங்கிய போது, வர்த்தகர் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். வர்த்தகர் நிக்கவெரட்டிய, மில்லகொட பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவித்த பொலிஸார், மஹரகம புகையிரத நிலைய வீதியில் மாத வாடகைக்கு 30,000 ரூபா வீடொன்றை வாடகைக்கு எடுத்து இவந்திகா குமாரி ஹேரத்துடன் குடியேறியதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts