கிளிநொச்சி கண்டாவளை பகுதிக்கு வைத்தியர் பிரியந்தினி பதிலாக மேலுமொருவர் திடீரென நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி வைத்தியர் பிரியந்தினி புதிய சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் வைத்தியர் பிரியந்தினி குறித்த பகுதியில் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரியாக தொடர்வார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களை குறிவைத்த மருத்துவ மாபியாக்களை மருத்துவர் பிரியந்தினி வெளிப்படுத்திய நிலையில், பொதுஜன பெரமுனவின் பிரதேசசபை வேட்பாளரான கோபால் என்பவர் தொலைபேசியில் அவரை மிரட்டியதை தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வைத்தியர் பிரியந்தினி கவனம் பெற்றார்.
அத்துடன், சிறிதரன் எம்.பியுடனான தொலைபேசி உரையாடல் வெளியான விவகாரத்திலும், அவர் மீது நடவடிக்கையெடுக்க கோரி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் , வைத்தியர் பிரியந்தினி, மேலதிக சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வேவு பார்க்க எனது பணிகளுக்கு இடையூறு விளைவிக்கவென இன்னொரு MOH ஐ அனுப்பினாலும், எனது சேவை கண்டாவளை பிரதேசத்து மக்களுக்கு தங்கு தடையின்றி தொடரும் என மருத்துவர் பிரியந்தினி தனது முகநூலில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Gallery