பிந்திய செய்திகள்

சுற்றிவளைப்பின் போது சிக்கிய போலி வைத்தியர்

ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பிரதேசத்தில்பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசேட அதிரடிப் படையினரால் நேற்று பிற்பகல் வைத்தியராக தன்னை அடையாளப்படுத்தி இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்தியராக தன்னை அடையாளப்படுத்தி நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்துள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 338 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், போதை மாத்திரைகளை வாங்க வந்திருந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் பணி புரிந்தவர் என தெரியவந்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts