பிந்திய செய்திகள்

வவுனியாவில் இடம்பெற்ற விபத்து உயிரிழந்த 32 இளைஞன்!

வவுனியா கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞர் எதிரே வந்துகொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதிலே இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமைடந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் காவல்துறையினர் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருவருகின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய ஏனைய இரு மோட்டார் சைக்கிள் சாரதிகளான இளைஞர் ஒருவரையும், பெண் ஒருவரையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உயிரிழந்த இளைஞன் பண்டாரிக்குளத்தினை சேர்ந்த ஸ்ரீரஞ்சன் வயது – 32 என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Gallery
Gallery

Gallery
Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts