Home இலங்கை பிரியந்தினிக்கு சார்பாக வீதிக்கு இறங்கிய மக்கள்!

பிரியந்தினிக்கு சார்பாக வீதிக்கு இறங்கிய மக்கள்!

0
பிரியந்தினிக்கு சார்பாக வீதிக்கு இறங்கிய மக்கள்!

கிளிநொச்சி கண்டாவளை பகுதிக்கு வைத்தியர் பிரியந்தினி மேலதிகமாக மேலுமொருவர் திடீரென நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு கிளிநொச்சி – கண்டாவளை AMOH மருத்துவர் பிரியந்தினிக்கு ஆதரவாக MOH அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புக்களும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது பதாதைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.

பாடசாலை மாணவர்களை குறிவைத்த மருத்துவ மாபியாக்களை மருத்துவர் பிரியந்தினி வெளிப்படுத்திய நிலையில் அதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கிளிநொச்சி கண்டாவளை பகுதிக்கு வைத்தியர் பிரியந்தினி மேலதிகமாக மேலுமொருவர் நேற்றைய தினம் திடீரென நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பிரதேசவாசிகள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here