வனிதா.ஜெயகாந்தன் அறக்கட்டளையின் ஒழுங்கமைப்பில் லண்டனில் வசித்து வரும் செல்வன் ஜெனார்தனன் .வருண் அவர்களின் முதலாவது பிறந்த தினத்தில் எதிர்வரும் 25.02 2022 அன்று காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் தாய்த்தமிழ் பேரவையின் ஆதரவோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் விஷன்கெயார் நிறுவனத்தின் கணிணி மூலமான பரிசோதனை மூலம் வறிய மக்களுக்கான இலவச கண்பரிசோதனை இலவசமாக மூக்கு கண்ணாடி வழங்கி வைக்கப்படுவதோடு இலவச காது பரிசோதனை என்பனவும் இடம் பெறவுள்ளது
இதில் கலந்து கொண்டு கண்ணாடி பெற்றுக்கொள்ள முடியாத வறிய நிலை மக்களை பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுவதுடன் இச்சேவைக்காக மக்களிடம் இருந்து எதுவித பணமும் அறவிடப்படமாட்டாது அனைத்து செலவுகளும் வனிதா.ஜெயகாந்தன் அறக்கட்டளை பொறுப்பேற்றுள்ளது மக்களுக்கான சேவையினை வழங்கவுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.













































