பிந்திய செய்திகள்

யானை உயிரிழப்பு – கைது செய்யப்பட்ட காணி உரிமையாளர்

விவசாய தோட்டம் ஒன்றிற்கு கட்டப்பட்ட மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்துள்ளது இச்சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை கிராமத்தில் நடைபெற்றுள்ளது

வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டுள்ளதுடன் ஒட்டுசுட்டான் பொலிஸாரும் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

இதன்போது விவசாய தோட்டக் காணியின் உரிமையாளரான 46 அகவையுடை பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் யானை உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.மேலும் மின்சார வேலியில் தும்பிக்கையினை பிடித்தபடி யானை உயிரிழந்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts