மூன்று பிள்ளைகளின் தாயான தில்ஷானி பெரேரா (40) என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.மேலும்
களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, பாலிகா வீதியில் நேற்றிரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரிய வருகையில், குறித்த பெண் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் இருந்த வேளையில், உந்துருளியொன்றில் வந்த இருவர் வீட்டு வளவினுள் நுழைந்துள்ளனர்.
அவர் கணவர் பிள்ளைகளுடன் அறையொன்றுக்குள் சென்று தாழிட்டுக்கொண்ட நிலையில், வீடு புகுந்த துப்பாக்கிதாரிகள் அவ்வறையின் கதவை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், குறித்த துப்பாக்கிதாரிகள் வீட்டின் பல இடங்களை நோக்கியும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மத்துகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.













































