பிந்திய செய்திகள்

இலங்கையில் அநுராதபுரம் – ஓமந்தை புகையிரத பாதை 5ஆம் திகதி முதல் மூடப்படும் !

அநுராதபுரம் – ஓமந்தை புகையிரத பாதை மார்ச் 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும்

குறித்த புகையிரத பாதையை திருத்தியமைக்க வேண்டும் என்ற அங்கீகாரம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பயண நேரத்தை சுமார் 40 நிமிடங்கள் குறைக்கும் நோக்கில் இந்த சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

மார்ச் 5ஆம் திகதி முதல் கொழும்பில் இருந்து அனுராதபுரத்திற்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கும் மாத்திரம் புகையிரதங்கள் இயக்கப்படும்.

அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை பஸ் சேவையொன்று சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அருகாமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts