பிந்திய செய்திகள்

வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளர் கொவிட் – 19 தொற்றால் காலமானார் !

கொவிட் – 19 தொற்றால் இன்று (16)காலை வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும் வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளருமான க.பரந்தாமன் காலமானார்.

கொழும்பில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று பி.ப. 1.30 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் நடைபெற்றன.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts