பிந்திய செய்திகள்

கடற்கரையில் மீட்கப்பட்ட புதிய வகை துப்பாக்கி ரவைகள்

நேற்று (17) முற்பகல் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரைப்பகுதியில் புலனாய்வு தகவல் ஒன்றிற்கமைய பிளாஸ்டிக் வடிவம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கரையொதிங்கிய குறித்த துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இத்தேடுதல் நடவடிக்கையானது கல்முனை கடற்படையினர் மேற்கொண்டதுடன் குறித்த துப்பாக்கி ரவைகள் புதிதாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கைப்பற்றப்பட்ட ரவைகளை கல்முனை பொலிசாரிடம் ஒப்படைப்பதற்கான பணியினை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts