மக்களின் இறையாண்மை என்பது வாக்கு. தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரால் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு செப்ரெம்பர் 20 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்த ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படும். தேர்தல் ஆணையகம் என்ற வகையில் எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.
ஒரு நாடு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இவ்வருடத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார்.
மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தேர்தல் முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பான சட்ட பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.