பிந்திய செய்திகள்

குழந்தைகளுக்கு பால் வழங்கும் போத்தல்களில் இரசாயனம்-வெளிவந்த தகவல்

இலங்கையில் பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைகளுக்கான பால் மற்றும் ஏனைய உணவுகள் வழங்கப்படும் போத்தல்கள் மற்றும் உணவுத் தட்டுகளில் பிஸ்பினோல் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

பிஸ்பினோல் என்ற புற்றுநோய் காரணி, பாலியல் குறைபாட்டை ஏற்படுத்துவதுடன், நீரிழிவு போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் இரசாயனமாகும்.

இந்நிலையில் குறித்த பிஸ்பினோல் என்ற புற்றுநோய் உண்டாக்கும் இரசாயனம் உயர் மட்டத்தில் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவை தொடர்ந்தும் பாவனையில் உள்ளதாக சுற்றுச்சூழல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் வேலைத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சலனி ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது ஐரோப்பிய சங்கத்தின் உறுப்பு நாடுகளிலும், மலேசியா, சீனா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலும் குழந்தைகளுக்கான உணவு பாத்திரங்களில் குறித்த இரசாயனங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, பிஸ்பினோல் ஹோர்மோன் தொழிற்பாட்டுக்கும் தடையை ஏற்படுத்துவதாக ஐரோப்பிய சங்கத்தின் உறுப்பு நாடுகள் தெரிவித்துள்ளன.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் சட்டப்பூர்வமாக இதனையொரு அபாயகரமான இரசாயனமாக ஏற்றுக்கொண்டுள்ளன.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts