பிந்திய செய்திகள்

யாழில் குருக்களின் வீட்டில் திருட்டு- சிக்கிய பிரதான சந்தேகநபர்

கடந்த மாதம் 28ம் திகதி மாலை 3 மணி தொடக்கம் 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் யாழ் பிறவுண் வீதியில் குருக்கள் ஒருவரின் வீட்டில் 24 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்ற பிரதான சந்தேக நபர் உட்பட மூவரை நகைகளுடன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினர் கைது செய்துள்ளனர்.

குருக்கள் வழமைபோல மாலைவேளை கோவிலுக்கு செல்வதை அவதானித்த பிரதான சந்தேகநபர் வீட்டின் முன் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தமையால் பின் பக்கமாக சென்று பின்பக்க கதவை உடைத்து வீட்டின் சாமி அறைக்குள் சென்று அங்கிருந்த 24 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார்.

இதில் தாலிக் கொடி, சங்கிலி கைச்சங்கிலி, காப்பு போன்ற நகைகள் அடங்கும். இது தொடர்பில் யாழ் காவல் நிலையத்தில் குருக்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

பிரதான சந்தேகநபர் யாழ் கஸ்தூரியார் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திருடப்பட்ட நகைகளை, திருட்டுக்கு உடந்தையாக இருந்த நபர் ஒருவர் மூலமாக வங்கியில் பணிபுரியும் ஒருவரின் உதவியுடன் வேலணையில் உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்தமை தெரிய வந்தது.

இவ்வாறு அடகுவைத்ததன் மூலம் பெறப்பட்ட பணத்தை கொண்டு கெரோயின் கொள்வனவு செய்ததாக அவர் தெரிவித்தார்.அத்துடன் அதிக கெரோயின் பயன்பாட்டினால் அதனை உட்கொள்வதற்கு பெருமளவு பணம் தேவைப்படுவதால் இப்படியாக திருட்டுக்களில் ஈடுபடுவதாக காவல்துறையிடம் அவர் தெரிவித்தார்.

மேலும் ஒரு நெக்லஸ் மற்றும் காப்பு ஒன்றும் தனியார் அடகு நிறுவனம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதால் அதனை மீட்கும் முயற்சியினை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

திருடப்பட்ட மிகுதி நகைகள் மீட்கப்பட்டன. மேலும் பிரதான சந்தேகநபர் உட்பட உடந்தையளித்த குற்றச்சாட்டில் சுன்னாகம் பகுதியை சேர்ந்த 28 வயது நபரும் நகைகளை அடகு வைக்க உதவிய வேலணை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts