பிந்திய செய்திகள்

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து-உயிர் தப்பிய சாரதி!

நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா குறுக்குப் பாதையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சாரதி தெய்வாதீனமாக தப்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. லொறியொன்றே இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

மகியங்கனையிலிருந்து அட்டன் பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து இடம்பெற்றி ருக்கலாம் என நானுஓயா பொலிஸார் கூறுகின்றனர்.

எனினும் லொறியின் சாரதி எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

அதேவேளை நானுஓயா குறுக்குப் பாதையில் மணல் லொறி போன்ற அதிக பாரம் சுமந்து வரும் வாகனங் களை இப்பாதையில் பயணிக்க தடைவிதித்து அறிவித்தல் காட்சிப்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts