பிந்திய செய்திகள்

விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயி-பாம்பு தீண்டி உயிரிழப்பு!

நேற்று மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறு கிராமத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் அரவம் தீண்டி உயிரிழந்துள்ளார்.

வயலில் விவசாய அறுவடைக்கு சென்றவேளையே மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த குறித்த விவசாயிமீது அரவம் தீண்டியுள்ளது.

இதன்போது விவசாயி மயங்கி வீழ்ந்த நிலையில் மூங்கிலாறு மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் மூங்கிலாறு கிராமத்தில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.விவசாயிகள் உரப்பிரச்சினைக்க மத்தியிலும் விவசாய செய்கையினை மேற்கொண்டு பல கஸ்ரங்களை அனுபவித்து வந்த நிலையிலும் அறுடை செய்யும் வோது குறித்த விவசாயி அரவம் தீண்டி உயிரிழந்துள்ளமை கவலைக்குரியதாகும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts