பிந்திய செய்திகள்

குழந்தையுடன் தலைமறைவான கணவன்..!

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக யாழ்ப்பாணம் இளவாலையில் 5 மாத குழந்தையுடன் கணவன் தலைமறைவாகியுள்ளதாக மனைவி இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கணவன் 5 மாதப் பிள்ளையை துாக்கி சென்ற சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனடிப்படையில் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதடையடுத்து கணவனை குழந்தையோடு நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டது.

எனினும் பிள்ளையின்றி நீதிமன்றில் முன்னிலையான நிலையில், 5 மாத பாலூட்டும் குழந்தை என்பதற்கிணங்க தாயாரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பணித்தது.

இந்நிலையில் குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்காது கணவர் குழந்தையோடு இன்று தலைமறைவாகியுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts