பிந்திய செய்திகள்

யாழில் இருந்து வெளிநாடு செல்ல இருந்தோருக்கு ஏற்பட்ட நிலை !

யாழில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 16 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 28 பேருக்குநேற்றைய தினம் (20-02-2022) யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டவர்களில் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர்களில் 16 பேர் வெளிநாடு செல்ல அனுமதி பெறுவதற்காக தம்மைப் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.

வடக்கில் நேற்றைய தினம் (20-02-2022) அவற்றின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 20 பேரும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேரும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை 03 பேரும், முழங்காவில் இலங்கை விமானப்படை முகாமில் ஒருவரும் என 28 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts