இலங்கை அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி பல்வேறு துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்து 2268/03 என்னும் இலக்கத்தை கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
மின்சாரம் வழங்கல், வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, உபசரிப்பு மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பில் செய்யப்பட வேண்டிய அனைத்து அவசிய அல்லது தேவைப்படும் சேவைகள்/ பணிகள் என்பவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்பத்பட்டுள்ளன.
நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.