பிந்திய செய்திகள்

தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து இரண்டு கற்களை சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்றுள்ளதால் கனரக வாகனமும் 10 பேர்ரும் கைது !

முள்ளியவளை தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து எதுவித அனுமதியும் அற்ற நிலையில், பாரிய இரண்டு கற்களை அகழ்ந்து கனரக வாகனங்களின்.தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு கற்களை சட்டவிரோதமான முறையில் வவுனியாவிற்கு கொண்டு சென்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Gallery

இராணுவத்தினரின் வீதிச்சோதனை நடவடிக்கையின் போது மறிக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் இவர்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுஜனபெரமுன கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மற்றும் பெண் உள்ளிட்ட 10 பேரே இவ்வாறு ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைதுசெய்துள்ளானர்.

Gallery

பாரிய கல்லினை ஏற்றிச்சென்ற வாகனம் மற்றும் சொகுசு வாகனம் என்பன ஒட்டுசுட்டான் காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

இவர்களிடம் இருந்து ஒரு கைபிடி மண்ணும் மீட்கப்பட்டுள்ள நிலையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினரால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts