பிந்திய செய்திகள்

யாழில் பட்டப்பகலில் மூதாட்டி கொலை : சிக்கிய சந்தேகநபர்!

யாழில் மூதாட்டி ஒருவர் பட்டப்பகலில் நேற்று முன்தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கொலையாளியான சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று காலை கைதானதாக கூறப்படுகின்றது. சோமசுந்திரம் அவனியூ பகுதியில் வீட்டின் கீழ்த்தளத்தில் தனித்திருந்த வயோதிப பெண் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார்.

அவரது பின் தலையில் கோடாரியால் தாக்கப்பட்டிருந்தார். இந்த கொலையை செய்தவர் வீட்டிலிருந்து வெளியில் செல்லும் சிசிரிவி காட்சிகள் வெளியாகியிருந்தன. கொலையின் பின் உயரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் சந்தேகநபர் துவிச்சக்கர வண்டியில் தப்பி ஓடும் மறைகாணி காணொளிகள் வெளியாகியிருந்தது.

இதனையடுத்து பல்வேறு பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டு தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டுவந்தது. இந்நிலையில் புன்னாலை கட்டுவனை சேர்ந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தொிவிக்கின்றன.

கொலை நடந்த இடத்திற்கு அண்மையாக உள்ள முழவை சந்தி பகுதியில் உள்ள தச்சு தொழிலகம் ஒன்றில் பணியாற்றிய இளைஞரே இவ்வாறு கைதாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts